|
1) சூரியன் உதயமானதும் ஹாஜிகள் மினாவிலிருந்து
அரஃபாவை நோக்கிச் செல்ல வேண்டும். முடியுமாயின் மஸ்ஜிதுந் நமிராவில்
காலையில் தங்கி தல்பியா கூறிக்கொண்டிருக்க வேண்டும்.
2) சூரியன்
உச்சியிலிருந்து சாய்ந்ததும் ளுஹரையும் அஸரையும் ஜம்வு செய்து ஒரு
பாங்கு இரண்டு இகாமத்துகளுடன் கஸராகத் தொழ வேண்டும். அவ்வாறுதான்
முற்படுத்திய ஜம்வு-ஆக நபி (ஸல்) அவர்கள் தொழுதுள்ளார்கள் (முஸ்லிம்).
இமாம் தொழுகைக்கு முன்பு சூழ்நிலைக்குப் பொருத்தமான ஓர் உரையை
நிகழ்த்துவார்.
3) பிறகு அரஃபாவில் சூரியன் மறையும் வரை தங்க
வேண்டும். நபி (ஸல்) அவர்கள் சூரியன் மறைந்து அதன் மஞ்சள் நிறம் மாறும்
வரை அரஃபாவை விட்டுச் செல்லவில்லை| என ஜாபிர் (ரழி) அறிவிக்கும் செய்தி
முஸ்லிமில் உள்ளது. அரஃபாவின் எந்தப் பகுதியிலும் தங்கலாம் உர்னா என்ற
பகுதியைத் தவிர. அரஃபாவில் கிப்லாவை முன்னோக்கி இருப்பது
விரும்பத்தக்கதாகும். 'ஹஜ் என்றாலே அரஃபாவில் தங்குவதுதான்!'| என நபி
(ஸல்) அவர்கள் கூறியிருப்பதால் அரஃபாவில் தங்குவது ஹஜ்ஜின் முதல்
நிலைக் கடமை(ருக்னு)களில் முக்கியமான ஒன்றாகக்
கருதப்படுகின்றது.
அரஃபா: 4) தொழுகைக்குப்
பிறகிலிருந்து சூரியன் மறையும் வரை நபி (ஸல்) அவர்கள் செய்தது போல
கிப்லாவை முன்னோக்கி கைகளை உயர்த்தி மிகவும் பணிவோடு அல்லாஹ்விடம்
துஆவும் திக்ரும் செய்துகொண்டிருக்க வேண்டும்.
அரஃபா நாளை விட
அதிகமாக அல்லாஹ் மக்களை நரகத்தை விட்டும் விடுதலை செய்யும் நாள் வேறு
இல்லை. அன்றைய தினம் அவன் இறங்கி வந்து மலக்குகளிடம் (தனது
அடியார்களைப் பற்றி) பெருமையாகப் பேசிவிட்டு இவர்கள் என்ன
வேண்டுகின்றனர்? என்று கூறுகிறான்| என்று நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள்.
இங்கு நபிமார்கள் கேட்ட துஆவைக் கேட்பது மிகச்
சிறந்ததாகும். அதாவது, 'துஆக்களில் சிறந்தது அரஃபா நாளில் கேட்கப்படும்
துஆவாகும். நானும் எனக்கு முந்தைய நபிமார்களும் கேட்ட துஆக்களில் மிகச்
சிறந்தது, லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்க லஹு, லஹுல் முல்கு
வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷையின் கதீர்| என்பதாகும்' என நபி
(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் (முஅத்தா).
அல்லாஹ்வுக்கு மிக
விருப்பமான வாசகங்கள் நான்கு: ஸுப்ஹானல்லாஹ், அல்ஹம்து லில்லாஹ்,
லாயிலாஹ இல்லல்லாஹ், அல்லாஹு அக்பர் ஆகியனவாம் என்பதும் நபி மொழி
(முஸ்லிம்). எனவே இந்த திக்ருகளை அதிகமதிகம் கூறிக்கொள்ள வேண்டும்.
மேலும் ஹதீஸ்களில் வந்துள்ள ஸுப்ஹானல்லாஹி வ பிஹம்திஹி,
ஸுப்ஹானல்லாஹில் அளீம், லாயிலாஹ இல்லா அன்த்த ஸுப்ஹானக்க இன்னீ குன்து
மினள்ளாலிமீன் போன்ற சிறந்த திக்ரு, துஆக்களையும்
அதிகப்படுத்திக்கொள்ள
வேண்டும். |