|
ஹஜ்ஜின் ருக்னு(முதல் நிலைக் கடமை)கள்:
-
இஹ்ராம் (நிய்யத்)
-
அரஃபாவில் தங்குதல்
-
தவாஃபுல் இஃபாளா
-
ஸயீ
ஹஜ்ஜின் வாஜிபு (இரண்டாம் நிலைக்
கடமை)கள்:
-
மீக்காத்தில் இஹ்ராம்
-
அரஃபாவில் பகலில் தங்கியவருக்கு மஃரிப் அதில்
தங்குதல்
-
முஸ்தலிஃபாவில் இரவு தங்குதல்
-
அய்யாமுத் தஷ்ரீக்கில் மினாவில் தங்குதல்
-
ஜமராக்களில் நான்கு தினங்களும் வரிசைப்படி
கல்லெறிதல்
-
முடியை மழித்தல் அல்லது குறைத்தல்
-
குர்பானி கொடுத்தல் (கிரான் மற்றும் தமத்துஃ
காரர்களுக்கு மட்டும்)
தவாஃபுல் விதாஃ ஹஜ்-உம்ராவின் முதல்
நிலைக் கடமைகள் - ருக்னுகளில் எதையேனும் ஒருவர் விட்டுவிட்டால் அதைச்
செய்யாமல் ஹஜ்ஜோ உம்ராவோ நிறைவேறாது. அவற்றின் இரண்டாம் நிலைக் கடமைகள்
- வாஜிபுகளில் எதையேனும் ஒருவன் விட்டுவிட்டால் அவன் ஹரமிலேயே ஓர்
ஆட்டைப் பலியிட்டு அங்குள்ள ஏழைகளுக்குப் பங்கிடவேண்டும். அதிலிருந்து
அவன் எதையும் உண்ணக்கூடாது. அந்த நிலையில் அவனுடைய ஹஜ்ஜும் உம்ராவும்
நிறைவேறும். |